முதல் படி


முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

– Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

– Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.

– Dr. David Schwartz

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்

செய்!

ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி.

விடாமுயற்சி

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

– Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது – ப்ரெமர்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.

– Abraham Lincoln.

வெற்றியாளர்வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த

முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.

– Napoleon Hill.

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

– George Washington Carver.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.

– Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.

– George Bernard Shaw.

வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

உயர்வுவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

– திருவள்ளுவர்.

அறிவுஉன்னை அறிந்தால் – நீ

உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்!

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்!!

– கவிஞர் கண்ணதாசன்.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! -புத்தர்

அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். -கார்ல் மார்க்ஸ்

மனிதர்தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்

கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு

வீழ்வேன் என்று நினைத்தாயோ? 

– மகாகவி சுப்பிரமணிய பாரதி.

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். – சாக்ரடிஸ்

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! -அம்பேத்கர்

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! -பெரியார்

வாழ்க்கைஎன் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

”தாத்தா… கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

”அடே பையா… வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!” சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ… எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. ‘ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ”இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை’‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

– சுவாமி சுகபோதானந்தா.

ஊக்கம்ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

காய்த்த மரம் கல் அடிபடும்.

காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

செய்வன திருந்தச் செய்.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

பதறாத காரியம் சிதறாது.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

உதவிஉதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.

– O. Wayne Rollins.

ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.

– Lao Tzu உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்! -பெரியார்

உழைப்பு = வெற்றிதுருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

– சுவாமி விவேகானந்தர். 

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

– வில்லியம் ஷேக்ஸ்பியர்

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்

சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் – ஹென்றி போர்டு

திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும் – தாமஸ் ஆல்வா எடிசன்

பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே – ஹென்றி போர்டு

உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி

நம்பிக்கைஇது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:

தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், ” ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

வெற்றி-தோல்விநீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது.”

– W. Clement Stone

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. – அடால்ஃப் ஹிட்லர்

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.

– Albert Einstein

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு -கிளப்டைன்

இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!’ – நேதாஜி

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். – சுவாமி விவேகானந்தர்

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். – பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்

கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை! >ஹ்யூம்

துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்

பயம்அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்

கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

பார்வைநீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.

உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.

– Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.

– Robert Allen.

நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.

– Dale Carnegie

உயரம்நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.

முயற்சிவிதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்

எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஐன்ஸ்டைன்

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! – நேதாஜி

உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்.

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்

வாய்ப்புஇது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

எண்ணம், சொல், செயல்எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும். – முஹம்மது நபி (ஸல்) 

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்

கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு;இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும் -ஹோரேஸ்

முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!

-ஸ்காட் பிட்ஜெரால்டு நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

இலக்குஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?

செல்வம்செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்

முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள். -வின்ஸ்டன் சர்ச்சில்

சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

கல்விஎதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ. 

கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்

நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.

என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.

அனுபவம்தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது. -வ.ஸ.காண்டேகர்.

இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே! -ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!’ – நேதாஜி

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! – அம்பேத்கர்

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

வழிநேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது-கதே

நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி

பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது! – நேதாஜி

சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது! -ஏங்கல்ஸ்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்

கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்! -பெரியார்

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

நட்புஉன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. – வைரமுத்து.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.

பெண்பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை. 

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை – லாண்டர்.

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்

வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்

பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். – ஆஸ்கார் ஒயில்ட்

அன்புநீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? – ‌அ‌ன்னை தெரசா

நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் – சா‌ர்ல‌ஸ்

மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்

பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி 

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் – செஸ்டர் பீல்டு

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி

எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்

அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.

வரலாற்றின் சிறந்த மேதைகள்


1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்

2.. புவியலின் தந்தை? தாலமி

3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்

4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்

5..கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ்

6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்

7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்

8..பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித்

9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே

10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்

11..அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ

12..மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்

13..நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்

14..வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்

15..மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்

16..ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன்

17..ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி

18..சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம்

19..ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்

20..நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்

21..தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர்

22..சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்

23..நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்

24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்

25..நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்

26..நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்

27..செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்

28..ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்

29..தொலைபேசியின் தந்தை? கிரகாம்ப்பெல்

30..நகைச்சுவையின் தந்தை? அறிச்டோபேனஸ்

31..துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ

32..இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே

33..இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா

34..இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்

35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா

36..இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்

36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்

37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்

38..இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்

39..இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா

40..இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்

41..இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா

42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி

43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்

45..இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்

46..இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்

47..இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்

48..இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்

49..இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்

50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு

51..இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு

52..இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்

53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி

54..ஜனநாயகத்தின் தந்தை? பெரிக்ளிஸ்

55..அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்

56..சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்

57..ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி

58..இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்

59..மின் அஞ்சலின் தந்தை? ரே டொமில்சன்

60..அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்

61..தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்

62..கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்

63..மனோதத்துவத்தின் தந்தை? சிக்மண்ட் பிரைடு

64..கூட்டுறவு அமைப்பின் தந்தை? இராபர்ட் ஓவன்

65..குளோனிங்கின் தந்தை? இயான் வில்முட்

66..பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்

67..உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு

68..ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்

69..அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே

70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்

சுப்பிரமணிய பாரதி (1882-1921)


சுப்பிரமணிய பாரதி

மகாகவி

சி. சுப்பிரமணிய பாரதி

பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன்

திசம்பர் 11, 1882

எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியாவின் கொடி இந்தியா

இறப்பு செப்டம்பர் 11, 1921 (அகவை 38)

சென்னை, இந்தியா

இருப்பிடம் திருவல்லிக்கேணி
நாடு இந்தியர்,
மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்
பணி செய்தியாளர்
அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.
Influenced பாரதிதாசன்
அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து சமயம்
பெற்றோர் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத் துணை செல்லம்மாள்
பிள்ளைகள் தங்கம்மாள் (பி: 1904)

சகுந்தலா (பி: 1908)

கையொப்பம்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழக வரலாறுதமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

இலக்கியப் பணி

பாரதியாரின் அபூர்வ புகைப்படம்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்      – பாரதி.

தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

தேடிச் சோறு நிதந் தின்று

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

படைப்புகள்

  1. குயில் பாட்டு
  2. கண்ணன் பாட்டு
  3. சுயசரிதை (பாரதியார்)
  4. தேசிய கீதங்கள்
  5. பாரதி அறுபத்தாறு
  6. ஞானப் பாடல்கள்
  7. தோத்திரப் பாடல்கள்
  8. விடுதலைப் பாடல்கள்
  9. விநாயகர் நான்மணிமாலை
  10. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
  11. பதஞ்சலியோக சூத்திரம்
  12. நவதந்திரக்கதைகள்
  13. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
  14. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
  15. சின்னஞ்சிறு கிளியே
  16. ஞான ரதம்
  17. பகவத் கீதை
  18. சந்திரிகையின் கதை
  19. பாஞ்சாலி சபதம்
  20. புதிய ஆத்திசூடி
  21. பொன் வால் நரி
  22. ஆறில் ஒரு பங்கு

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 – ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 – மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909 – 1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் “இந்தியா” பத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்

பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.

தேசியக் கவி

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்

பெண்ணுரிமைப் போராளி

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். “போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்” என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

BHARATHIYAR MUSEUM.JPG

மறைவு

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னைதிருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

கரிகால் சோழன்


கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவா. இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.

வெண்ணிப் போர்

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

சொந்த வாழ்க்கை

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்.

புராணக் கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

இறப்பு

கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

மேலும் அவர் இயற்றியவை :

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்

கல்லணை


கல்லணை அமைவிடம் திருச்சிராப்பள்ளியில் இருந்த 15 கிமி, தமிழ்நாடு

புவியியல் ஆள்கூற்று 10.830166°N 78.818784°Eஆள்கூற்று: 10.830166°N 78.818784°E

திறந்தது 2 ஆம் நூற்றாண்டு

அணையும் வழிகாலும்

வகை நீர்தேக்கம்

காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்

நீளம் 0.329 km (1,079 ft)

அகலம் (base) 20 m (66 ft)

கல்லணை

கல்லணையில் காவிரி

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.

கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

வரலாறு

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்

இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. நடுநிலையான உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.

கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்ற பெயரையும் சூட்டினார்.

அணை பற்றிய பொறியியல் ஆய்வு

முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது (தென் இந்தியாவின் குளங்களும் அணைக்கட்டுகளும் – ஒரு மாற்று பொறியியல் ஆய்வு உதாரணங்கள் – சித்ரா கிருஷ்ணன் & சீனிவாஸ் வீராவல்லி, பயன்பாட்டு விசையியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கழகம், புது தில்லி (IIT Delhi) pp. 220-226). காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது.

ஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); “கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது.”

நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776-ல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது – கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது – சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.

கரிகால சோழன் மணிமண்டபம்

பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

கல்லணை பற்றி சங்க கால சான்றுகள்

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்


தஞ்சைப் பெருவுடையார் கோயில்

திருவிசைப்பா பாடல் பெற்ற
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

பெயர்
பெயர்: தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: தஞ்சாவூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பெருவுடையார் (பிரகதீசுவரர்)
தாயார்: பெரியநாயகி
தல விருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: சிவகங்கை
சிறப்பு திருவிழாக்கள்: மகா சிவராத்திரி
பாடல்
பாடல் வகை: திருவிசைப்பா
பாடியவர்கள்: கருவூரார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: கிபி 11-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்: (முதலாம் இராஜராஜ சோழன்)

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது.

 
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் ஆலயம்
Big Temple-Temple.jpg
வகை கலாச்சாரம் சார்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987 (11வது தொடர்)

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 

சொல்லிலக்கணம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில்[6], பெரிய கோயில், இராஜராஜஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

வரலாறு

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் இராஜராஜன் என்று அழைக்கப்பட்ட சோழப் பேரரசரால் கட்டப்பட்டதாகும்.

இடைக்காலச் சோழர்கள்

கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்கால சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.

பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்தியின் மாதிரியை கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.

கோயில் அமைப்பு

தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும். முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial) மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.

முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

இக்கோயிலின் கட்டிடக்கலைசோழர் கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

இடைச்சிக் கல்

பெரியகோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர்,மோர் வழங்கி வந்தார்.

இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.

வடிவமைப்பு

எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்ப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.

நந்தி மண்டபம்

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.

சந்நிதிகள்

சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

  • பெருவுடையார் சந்நிதி – பிரகதீசுவரர், பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூவருக்கு பீடம் இல்லை.
  • பெரியநாயகி அம்மன் சந்நிதி – இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.
  • கருவூர் சித்தர் சந்நிதி – இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.
  • நவகிரக இலிங்க சந்நிதி – இக்கோயிலில் சிவபெருமானே நவகிரகமாக இருக்கிறார். அதனால் நவகிரங்களின் உருவச் சிலைகளுக்குப் பதிலாக நவ லிங்கங்களே அமைந்துள்ளன.
  • வராகி அம்மன் சந்நிதி –

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும்சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.

விழாக்கள்

தஞ்சைக் கோயிலின் தோற்றம்

  • பிரம்மோற்ஸவம் –
  • ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
  • அன்னாபிஷேகம்
  • திருவாதிரை
  • ஆடிப்பூரம்
  • கார்த்திகை
  • பிரதோசம்
  • சிவராத்திரி
  • தேரோட்டம்

தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு

  • இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.
  • இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
  • இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
  • கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
  • இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
  • தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.
  • 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை

தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி Indian Rupee symbol.svg 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

ஆயிரமாண்டு நிறைவு விழா

சதயத்திருவிழாத் தோற்றம்

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.

 

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்


*முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!*

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

*நீதி:* தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

*வெயிட்… இனிதான் கதையே ஆரம்பம்!*

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

*நீதி2:* நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்… அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

*ஒன்… டூ… த்ரீ…*

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

*நீதி3:* நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது… ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்?

ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

*நீதி4:* டீம் வொர்க் வின்ஸ்!

*டீம்_வொர்க்*
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம்.

இந்த கதை இறுதியாக உணர்த்தும் *‘யூ வின், ஐ வின்!’* அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

*வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.*

முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!