சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை பாரதியார் என்றும்மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆன்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாக கருதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் [6]. 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர்,1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
இலக்கியப் பணி
 
பாரதியாரின் அபூர்வ புகைப்படம்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுனைந்த கவிஞாயிறு.சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சுயசரிதை
தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாரதியார் பகவத் கீதை (பேருரை)
பதஞ்சலியோக சூத்திரம்
நவதந்திரக்கதைகள்
உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
சின்னஞ்சிறு கிளியே
ஞான ரதம்
பகவத் கீதை
சந்திரிகையின் கதை
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
பொன் வால் நரி
ஆறில் ஒரு பங்கு 
இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 – ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 – மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் “இந்தியா” பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிசென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவு மூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச்சட்ட சபையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்திஉள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.
தேசியக் கவி

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர்,பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் – என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்

பெண்ணுரிமைப் போராளி

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். “போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்” என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காக சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம்,சென்னைதிருவல்லிக்கேணியில்  அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்றுபஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்  யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். யானை மிதித்து இறந்ததாக தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை.[சான்று தேவை] அவர் கடைசி நாட்களை கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.
மகாகவி பாரதியார் கவிதைகள்உள்ளுறை
முதல் பாகம்
தேசீய கீதங்கள்
1.பாரத நாடு1.வந்தே மாதரம்2.வந்தே மாதரம்3.வந்தே மாதரம்4.பாரத நாடு5.பாரத தேசம்6.எங்கள் நாடு7.ஜயபாரதம்!8.பாரத மாதா9.எங்கள் தாய்10.வெறி கொண்ட தாய்11.பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி12.பாரத மாதா நவரத்தின மாலை13.பாரத தேவியின் திருத்தசாங்கம்14.தாயின் மணிக்கொடி15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை16.போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்17.பாரத சமுதாயம்18.ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு)19.ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு)2.தமிழ் நாடு20.செந்தமிழ் நாடு21.தமிழ்த் தாய்22.தமிழ்23.தமிழ்மொழி வாழ்த்து24.தமிழ்ச் சாதி25.வாழிய செந்தமிழ்3.சுதந்திரம்26.சுதந்திரப் பெருமை27.சுதந்திரப் பயிர்28.சுதந்திர தாகம்29.சுதந்திர தேவியின் துதி30.விடுதலை31.சுதந்திரப் பள்ளு4. தேசீய இயக்கப் பாடல்கள்32.சத்ரபதி சிவாஜி33.கோக்கலே சாமியார் பாடல்34.தொண்டு செய்யும் அடிமை35.நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?36.நாம் என்ன செய்வோம்!37.பாரத தேவியின் அடிமை38.வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று39.தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி40.நடிப்புச் சுதேசிகள்5. தேசீயத் தலைவர்கள்41.மகாத்மா காந்தி பஞ்சகம்42.குரு கோவிந்தர்43.தாதாபாய் நவுரோஜி44.பூபேந்திரர் விஜயம்45.வாழ்க திலகன் நாமம்46.திலகர் முனிவன் கோன்47.லாஜபதி48.லாஜபதியின் பிரலாபம்49.வ.உ.சி.-க்கு வாழ்த்து6. பிற நாடுகள்50.மாஜினியின் சபதம்51.பெல்ஜியத்திற்கு வாழ்த்து52.புதிய ருஷியா53.கரும்புத் தோட்டத்திலேஇரண்டாம் பாகம்தெய்வப் பாடல்கள்1. தோத்திப் பாடல்கள்1.விநாயகர் நான்மணி மாலை2.முருகா! முருகா!3.வேலன் பாட்டு4.கிளிவிடு தூது5.முருகன் பாட்டு6.வள்ளிப் பாட்டு-17.வள்ளிப் பாட்டு-28.இறைவா! இறைவா!9.போற்றி அகவல்10.சிவ சக்தி11.காணி நிலம் வேண்டும்12.நல்லதோர் வீணை13.மஹாசக்திக்கு விண்ணப்பம்14.அன்னையை வேண்டுதல்15.பூலோக குமாரி16.மஹாசக்தி வெண்பா17.ஓம் சக்தி18.பராசக்தி19.சக்திக் கூத்து20.சக்தி21.வையம் முழுதும்22.சக்தி விளக்கம்23.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்24.சக்தி திருப்புகழ்25.சிவசக்தி புகழ்26.பேதை நெஞ்சே27.மஹாசக்தி28.நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)29.காளிப்பாட்டு30.காளி ஸ்த்தோத்திரம்31.யோக சித்தி32.மகா சக்தி பஞ்சகம்33.மஹாசக்தி வாழ்த்து34.ஊழிக்கூத்து35.காளிக்குச் சமர்ப்பணம்36.காளி தருவாள்37.மஹா காளியின் புகழ்38.வெற்றி39.முத்துமாரி40.தேச முத்துமாரி41.கோமதி மஹிமை42.சாகா வரம்43.கோவிந்தன் பாட்டு44.கண்ணனை வேண்டுதல்45.வருவாய் கண்ணா!46.கண்ண பெருமானே!47.நந்த லாலா48.கண்ணன் பிறப்பு49.கண்ணன் திருவடி50.வேய்ங்குழல்51.கண்ணம்மாவின் காதல்52.கண்ணம்மாவின் நினைப்பு53.மனப் பீடம்54.கண்ணம்மாவின் எழில்55.திருக்காதல்56.திருவேட்கை57.திருமகள் துதி58.திருமகளைச் சரண்புகுதல்59.ராதைப் பாட்டு60.கலைமகளை வேண்டுதல்61.வெள்ளைத் தாமரை62.நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)63.மூன்று காதல்64.ஆறு துணை65.விடுதலை வெண்பா66.ஜெயம் உண்டு67.ஆரிய தரிசனம்68.சூரிய தரிசனம்69.ஞாயிறு வணக்கம்70.ஞானபாநு71.சோமதேவன் புகழ்72.வெண்ணிலாவே!73.தீ வளர்த்திடுவோம்!74.வேள்வித் தீ75.கிளிப் பாட்டு76.யேசு கிறிஸ்து77.அல்லா2. ஞானப் பாடல்கள்78.அச்சமில்லை79.ஜெய பேரிகை80.சிட்டுக் குருவியைக் போலே81.விடுதலை வேண்டும்82.வேண்டும்83.ஆத்ம ஜெயம்84.காலனுக்கு உரைத்தல்85.மாயையைப் பழித்தல்86.சங்கு87.அறிவே தெய்வம்88.பரசிவ வெள்ளம்89.பொய்யோ?மெய்யோ90.நான்91.சித்தாந்தச் சாமி கோயில்92.பக்தி93.அம்மாக்கண்ணு பாட்டு94.வண்டிக்காரன் பாட்டு95.கடமை அறிவோம்96.அன்பு செய்தல்97.சென்றது மீளாது98.மனத்திற்குக் கட்டளை99.மணப் பெண்100.பகைவனுக்குகருள்வாய்101.தெளிவு102.கற்பனையூர்மூன்றாம் பாகம்பல்வகைப் பாடல்கள்1. நீதி1.புதிய ஆத்திசூடி2.பாப்பாப் பாட்டு3.முரசு2.சமூகம்4.புதுமைப் பெண்5.பெண்கள் வாழ்க!6.பெண்கள் விடுதலைக்கும்மி7.பெண் விடுதலை8.தொழில்9.மறவன் பாட்டு10.நாட்டுக் கல்வி11.புதிய கோணங்கி3.தனிப் பாடல்கள்12.காலைப் பொழுது13.அந்திப் பொழுது14.நிலாவும் வான்மீனும் காற்றும்15.மழை16.புயற் காற்று17.பிழைத்த தென்னந்தோப்பு18.அக்கினிக் குஞ்சு19.சாதாரண வருஷத்துத் தூமகேது20.அழகுத் தெய்வம்21.ஒளியும் இருளும்22.சொல்23.கவிதைத் தலைவி24.கவிதைத் காதலி25.மது26.சந்திரமதி4. சான்றோர்27.தாயுமானவர் வாழ்த்து28.நிவேதிதா29.அபேதாநந்தா30.ஓவியர்மணி இரவிவர்மா31.சுப்பராம தீட்சிதர்32.மகாமகோபாத்தியாயர்33.வெங்கடேசு ரெட்டப்ப பூபதி34.ஹிந்து மதாபிமான சங்கத்தார்35.வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு5. சுய சரிதை36.கனவு37.பாரதி அறுபத்தாறு6. வசன கவிதை38.காட்சி39.சக்தி40.காற்று41.கடல்42.ஜகத் சித்திரம்43.விடுதலைநான்காம் பாகம்முப்பெரும் பாடல்கள்1. கண்ணன் பாட்டு1.கண்ணன்-என் தோழன்2.கண்ணன்-என் தாய்3.கண்ணன்-என் தந்தை4.கண்ணன்-என் சேவகன்5.கண்ணன்-என் அரசன்6.கண்ணன்-என் சீடன்7.கண்ணன்-என் சற்குரு8.கண்ணம்மா-என் குழந்தை9.கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை10.கண்ணன்-என் காதலன்11.கண்ணன்-உறக்கமும் விழிப்பும்12.கண்ணன்-காட்டிலே தேடுதல்13.கண்ணன்-பாங்கியைத் தூது விடுத்தல்14.கண்ணன்-பிரிவாற்றாமை15.கண்ணன்-என் காந்தன்16.கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு17.கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல்18.கண்ணம்மா-என் முத்திரை களைதல்19.கண்ணம்மா-என் நாணிக் கண் புதைத்தல்20.கண்ணம்மா-என் குறிப்பிடம் தவறியது21.கண்ணம்மா-என் யோகம்22.கண்ணம்மா-என் ஆண்டான்23.கண்ணம்மா- எனது குலதெய்வம்2. பாஞ்சாலி சபதம் முதற் பாகம்
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்1.பிரம்ம ஸ்துதி2.சரஸ்வதி வணக்கம்3.ஹஸ்தினாபுரம்4.துரியோதனன் சபை5.துரியோதனன் பொறாமை6.துரியோதனன் சகுனியிடம் சொல்வது7.சகுனியின் சதி8.சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்9.திரிதராட்டிரன் பதில் கூறுதல்10.துரியோதனன் சினங் கொள்ளுதல்11.துரியோதனன் தீமொழி12.திரிதராட்டிரன் பதில்13.துரியோதனன் பதில்14.திரிதராட்டிரன் சம்மதித்தல்15.சபா நிர்மாணம்16.விதுரனைத் தூது விடல்17.விதுரன் தூது செல்லுதல்18.விதுரனை வரவேற்றல்19.விதுரன் அழைத்தல்20.தருமபுத்திரன் பதில்21.விதுரன் பதில்22.தருமபுத்திரன் தீர்மாணம்23.வீமனுடைய வீரப்பேச்சு24.தருமபுத்திரன் முடிவுரை25.நால்வரும் சம்மதித்தல்26.பாண்டவர் பயணமாதல்27.மாலை வருணனைசூதாட்டச் சருக்கம்28.வாணியை வேண்டுதல்29.பாண்டவர் வரவேற்பு30.பாண்டவர் சபைக்கு வருதல்31.சூதுக்கு அழைத்தல்32.தருமன் மறுத்தல்33.சகுனியின் ஏச்சு34.தருமனின் பதில்35.சகுனி வல்லுக்கு அழைத்தல்36.தருமன் இணங்குதல்37.சூதாடல்38.நாட்டை வைத்தாடுதல்இரண்டாம் பாகம்அடிமைச் சருக்கம்39.பராசக்தி வணக்கம்40.சரஸ்வதி வணக்கம்41.விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்42.விதுரன் சொல்வது43.சூது மீட்டும் தொடங்குதல்44.சகுனி சொல்வது45.சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்46.நகுலனை இழத்தல்47.பார்த்தனை இழத்தல்48.வீமனை இழத்தல்49.தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்50.துரியோதனன் சொல்வது51.சகுனி சொல்வதுதிரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்52.திரௌபதியை இழத்தல்53.திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி54.துரியோதனன் சொல்வது55.திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்56.துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது57.விதுரன் சொல்வது58.துரியோதனன் சொல்வது59.திரௌபதி சொல்லுதல்60.துரியோதனன் சொல்வதுசபதக் சருக்கம்61.துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்62.திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்63.சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்64.வீட்டுமாசார்யன் சொல்வது65திரௌபதி சொல்வது66.வீமன் சொல்வது67.அர்ஜீனன் சொல்வது68.விகர்ணன் சொல்வது69.கர்ணன் பதில்70.திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை71.வீமன் செய்த சபதம்72.அர்ஜீனன் சபதம்73.பாஞ்சாலி சபதம்3. குயில் பாட்டு1.குயில்2.குயிலின் பாட்டு3.குயிலின் காதற் கதை4.காதலோ காதல்5.குயிலும் குரங்கும்6.இருளும் ஒளியும்7.குயிலும் மாடும்8.நான்காம் நாள்9.குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்புதிதாகச் சேர்க்கப் பெற்ற பாடல்கள்1.உயிர் பெற்ற தமிழர் பாட்டு2.இளசை ஒருபா ஒருபஃது
Advertisements